மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு என்ன தகுதி வேண்டும்?

மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு என்ன தகுதி வேண்டும்?

காலங்காலமாக நாம் அறிந்த அரசுப் பணிகள், வங்கிப் பணிகள், பொதுத்துறைகள், தொழில்நுட்பப் பணிகள் இவற்றைத் தாண்டி இன்று புதிய பரிமாணத்தில் உருவாகிவரும் பணி வாய்ப்புகள் பல உள்ளன. நிச்சயமாக திறனுக்கு ஏற்ற ஒரு புதிய வேலைவாய்ப்பு, மொழிபெயர்ப்பாளர் ஆவது.

மொழிபெயர்ப்பாளர்கள் என்றால் வெளிநாட்டினர் வருகைபுரியும்போது அவர்களுடன் சென்று அந்தந்த ஸ்தல வரலாற்றை விளக்கும் வழிகாட்டி ஆவது என்கிற நிலை மாறிவிட்டது. இன்று அறிவியல் / பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏராளமான மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுடைய அறிவியல் கட்டுரைகளை மொழிபெயர்க்கத் தகுதி வாய்ந்த நபர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தேவைப்படுகிறார்கள்.

தமிழைத் தவிர வேற்று மொழிகள் ஏதேனும் ஒன்றில் தகுதிபெற்று உடன் மொழிபெயர்ப்பில் முதுகலைப் பட்டயம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பதிப்பகத் துறையில் நல்ல வாய்ப்பு உள்ளது.

Leave a Reply