மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துக்கள்: ராகுல்காந்தி
17வது மக்களவை தொகுதியின் முடிவுகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை ஆட்சியை பிடிக்க முடியாமல் போன காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:
மோடிக்கும் பாஜகவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். என்ன நடந்தது என்று ஆய்வு செய்யும் நாள் இன்றல்ல. மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு எந்த நிறத்தையும் கொடுக்க விரும்பவில்லை. மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்றும் ராகுல் காந்தி கூறினார்.