மோடிக்கு எதிராக எங்களை போராடத் தூண்டியது திமுக தான்: அய்யாக்கண்ணு
மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் என்று அய்யாகண்ணு பகீர் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பிரச்சனைக்காக டெல்லி வரை சென்று அருவருப்பான போராட்டங்களில் ஈடுபட்டவர் அய்யக்கண்ணு. அவர் விவசாயிகளுக்காக போலியாக போராடுபவர்கள் என அப்போதே பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர்.
ஆனால் அவருடைய உண்மை முகம் தெரியாமல் திமுகவும் மக்கள் நீதி மய்யமும் அவருக்கு ஆதரவு அளித்தது. ஆனால் சமீபத்தில் அமித்ஷாவை நேரில் சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த அய்யாக்கண்ணு தற்போது மோடிக்கு எதிராக எங்களை டெல்லி வரை சென்று போராடத் தூண்டியதும், எங்களை முழுமையாக இயக்கியதும் காங்கிரஸ் மற்றும் திமுகதான் என்றும் அய்யாகண்ணு கூறியுள்ளார்.