மோடி-இம்ரான்கான் சந்திப்பா?
இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திரமோடி கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் நரேந்திரமோடியும் இம்ரான்கானும் இந்த மாநாட்டின்போது சந்திக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது
ஆனால் இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர்கள் இடையே சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளது