மோடி ஒரு பொய்யர். அவரால் என் கண்ணை பார்த்து பேச முடியுமா? ராகுல்காந்தி ஆவேசம்

மோடி ஒரு பொய்யர். அவரால் என் கண்ணை பார்த்து பேச முடியுமா? ராகுல்காந்தி ஆவேசம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மீதான வாக்கெடுப்புக்கு முன்பு நடக்கும் விவாதத்தில் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளதாக கூரப்படுகிறது. இதனால் ராகுல் பேசியபோது பாஜகவின் கூச்சல் போட்டு குழப்பம் விளைவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

இன்று நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முந்தைய விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் தனது உரையில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றி சரமாரியாக விமர்சனம் செய்தார்.

தனது உரையில் ராகுல் காந்தி மத்திய அரசின் எந்த திட்டத்தையும் விட்டுவைக்கவில்லை. மோடியின் அறியாமை காரணமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, விலைவாசி உயர்வு, பிரதரின் வெளிநாட்டு பயணம், பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு என சரமாரியான வெடி அவரது பேச்சில் இருந்தது.

மேலும் மோடி குறித்து பேசிய ராகுல், மோடி முழுக்க முழுக்க பொய்யாக பேசி இருக்கிறார். அவர் இதுவரை கூறியது எல்லாமே பொய், மோடி ஒரு பொய்யர் என்று மோடியை பார்த்து கண்ணுக்கு எதிராக பேசினார். மேலும் மோடியால் என் கண்ணை கூட பார்க்க முடியாது. அவர் அந்த அளவிற்கு பொய் சொல்லி இருக்கிறார். மோடி என் கண்ணை பார்த்து பேச வேண்டும், அவருக்கு அந்த தைரியம் இல்லை, என்றார் .

ராகுல்காந்தி மோடியை மட்டுமின்றி பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விட்டு வைக்கவில்லை. நிர்மலா சீதாராமன் அவையில் பொய்யான தகவல்களை கூறுவதாகவும், ரபேல் ஊழல் குறித்து பேச மறுப்பதாகவும், மோடியை போலவே நிர்மலா சீதாராமனும் பொய்களை மட்டுமே பேசுவதாகவும் ராகுல்காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்

Leave a Reply