மோடி-கருணாநிதி சந்திப்பு 2ஜி வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா? சுப்பிரமணியன் சுவாமி
இந்தியாவையே உலுக்கிய, ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என்ற நிலையில் திடீரென இந்த அறிவிப்பு டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்ததற்கும் இந்த ஒத்திவைப்புக்கும் சம்பந்தம் இருக்குமா? என்று அரசியல் விமர்சர்கள் சந்தேகம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து சுப்பிரமணியம் சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை மோடி சந்தித்தாலும் 2ஜி வழக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமி 2ஜி வழக்கு ராசாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் நிச்சயமாக உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் கூறினார். அதேபோல் பாதகமாக தீர்ப்பு வந்தால் ராசா உச்சநீதிமன்றம் செல்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.