மோடி செல்வாக்கு குறைந்துவிட்டது. குஜராத் தேர்தல் முடிவு குறித்து திருநாவுக்கரசர்

மோடி செல்வாக்கு குறைந்துவிட்டது. குஜராத் தேர்தல் முடிவு குறித்து திருநாவுக்கரசர்

இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் எதிர்பார்த்த குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. குஜராத் மாநிலத்தில் இப்போதைய முன்னணியை வைத்து பார்க்கும்போது பாஜக ஆட்சி அமைப்பதற்கு தேவையான தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் குஜராத்தில் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து கூறியதாவது: பிரதமர் மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தன் பலத்தை இழந்துள்ளார். ஆட்சி, அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் குஜராத்தில் 61 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தற்போது அதனைவிட 13 தொகுதிகளில் கூடுதலாக காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது’ என்றும் திருநாவுக்கரசர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply