மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் பிரபலங்கள்!

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் பிரபலங்கள்!

நரேந்திர மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில் இன்றைய விழாவில் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு இல்லாததால் அவரும் இந்த விழாவுக்கு செல்லவில்லை

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில், ‘வாழ்த்துகள்.. புதிய பிரதமர் மோடி. மோடி, பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் பங்கேற்பதற்கு முடிவு செய்திருந்தேன். ஆனால், கடைசி ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை காரணமாக 54 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் பாஜகவின் செய்திகளைப் பார்க்கிறேன். இது முற்றிலும் தவறானது.
மேற்குவங்கத்தில் எந்த அரசியல் படுகொலைகளும் நடைபெறவில்லை. தனிப்பட்ட வெறுப்பு, குடும்ப பிரச்னைகளின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பிரச்னையால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம். அரசியலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மன்னியுங்கள் மோடி.. இந்த விவகாரம் பதவியேற்பு விழாவில் என்னை கலந்துகொள்ளவேண்டாம் என்று முடிவு எடுக்கவைத்துள்ளது. அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியபோது, ‘ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்கவுள்ளதல், அந்த விழாவில் தான் பங்கேற்க வேண்டும் என்பதால் டெல்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் என்றும் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்

Leave a Reply