மோடி பதவியேற்பு விழா! மம்தா பானர்ஜி திடீர் பல்டி

மோடி பதவியேற்பு விழா! மம்தா பானர்ஜி திடீர் பல்டி

மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதாக அறிவித்திருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று திடீரென தனது முடிவை மாற்றி, விழாவில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘புதிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். பதவியேற்பு விழாவிற்கான அழைப்பை ஏற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், ஒரு மணி நேரமாக, மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறையில் 54 பேர் கொல்லப்பட்டதாக பா.ஜ., கூறியதாக தகவல் வெளியாகின. இது உண்மைக்கு மாறானது. மேற்கு வங்கத்தில் அரசியல் கொலைகள் நடக்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவும், குடும்ப பிரச்னை காரணமாக அவர்கள் கொல்லப்பட்டனர். இதில் அரசியல் காரணம் இல்லை. இதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.இதனால், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. இதற்கு மோடியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த விழா ஜனநாயகத்தை கொண்டாடுவதற்கான விழா. அரசியல் லாபத்திற்காக மற்ற கட்சிகளை இழிவுபடுத்த யாரையும் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.

Leave a Reply