மோடி, ராகுல், ராஜ்நாத்சிங்: தமிழகத்திற்கு படையெடுக்கும் தேசிய தலைவர்கள்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழகத்திற்கு அடுத்தடுத்து பிரச்சாரத்திற்காக வரவுள்ளனர்.
பிரதமர் மோடி, வரும், 8ம் தேதி, பிரசாரத்திற்காக, தமிழகம் வருகிறார். அவர் தேனி தொகுதி, சிவகெங்கை தொகுதி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல், 10 அல்லது, 11ம் தேதி, தமிழகம் வர உள்ளார். காங்., வேட்பாளர்கள் பலர், ராகுல், தங்கள் தொகுதியில் தான் பிரசாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகத்தில் நாளை கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யவுள்ளார்.