மோரிலும் கேக் செய்யலாம்

மோரிலும் கேக் செய்யலாம்

என்னென்ன தேவை?

சேமியா – கால் கப்

கோதுமை ரவை – கால் கப்

அரிசிமாவு – அரை கப்

தயிர் – 2 கப்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

சின்ன வெங்காயம் – அரை கப்

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து – அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 6 (விழுதாக அரைத்தது)

தேங்காய்த் துருவல் – கால் கப்

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது நெய்விட்டு சேமியா, கோதுமை ரவையைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். தயிரில் தேவையான அளவு நீர்விட்டு மோராகக் கடைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு கறிவேப்பிலை, சீரகம் போட்டுத் தாளியுங்கள். அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி மிளகாய் விழுது, உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கிளறி கடைந்த மோரை ஊற்றி அடுப்பைக் குறைந்த தீயில் வையுங்கள்.

வறுத்து வைத்துள்ள சேமியா, கோதுமை ரவையைக் கொட்டிக் கிளறி, பாதி வெந்ததும் அரிசிமாவைக் கொட்டிக் கிளறுங்கள். அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து மல்லித் தழையைத் தூவி நடுவே சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி இறக்கிவையுங்கள். எண்ணெய் தடவிய தட்டில் இந்தக் கலவையைக் கொட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.

Leave a Reply