யாதுமாகி நின்றாய் காளி!

யாதுமாகி நின்றாய் காளி!

kali‘க’ என்னும் எழுத்து அரசன், நான்முகன், ஆன்மா, உடல், செல்வன், திருமால், மனம், ஆனைமுகக் கடவுள், நலம், ஒளி வல்லவன் எனப் பல பொருள் தரும். ‘அளி’ என்பது வழங்குதல் என்று பொருள் தரும். அதன்படி காளி என்னும் சொல்லுக்கு, அரசபோகத்தை அளிப்பவள், ஆன்ம விடுதலையை அளிப்பவள், உடல்நலத்தை அருள்பவள், செல்வங்களைத் தருபவள், தூய மனதை அளிப்பவள், ஒளிமயமான வாழ்வை அருள்பவள், வல்லமையைத் தருபவள் என்று பொருள் தரும். அப்படிப்பட்ட அன்னை தான் சென்னை தம்புசெட்டித் தெருவில் எழுந்தருளி இருக்கும் காளிகாம்பாள்.

அதிகாலைப் பொழுதிலேயே பல முக்கிய பிரபலங்களும் வந்து வழிபடும் கோயில்.

மலேசியா, மொரீஷியஸ், கொழும்பு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து வழிபடும் கோயில்.

தேசிய கவி பாரதியார் அடிக்கடி இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்து இருக்கிறார். அவர் இயற்றிய ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்ற பாடல் காளிகாம்பாளைப் பற்றிய பாடலே ஆகும்.
1677-ம் ஆண்டு மராட்டிய மாவீரன் சிவாஜி இந்தக் கோயிலுக்கு வந்து காளிகாம்பாளை வழிபட்டுச் சென்றதாகவும், அதன்பிறகே ‘சத்ரபதி’யாக முடிசூட்டிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் காளிகாம்பாளை தரிசித்து வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியவளாக அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகை, மேற்குப் பார்த்து எழுந்தருளி இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு அருள்புரியும் முருகப்பெருமான் திருமுன்னா் அமா்ந்து, ஆண்டவன்பிச்சை என்னும் உத்தமி எழுதி, ஏழிசைமாமணி டி.எம்.எஸ். பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல் ‘உள்ளம் உருகுதய்யா’ அன்னையின் சந்நிதி சுற்றுச்சுவா்களில் (கோமுகம் பக்கத்தில்) சண்டிகேஸ்வரி, கோஷ்டத்தில் சரஸ்வதி, ப்ரம்ம வித்யா, வைஷ்ணவி, தாக்ஷாயணி, மஹாலக்ஷ்மி எனும் ஐவரும் எழுந்தருளி அருள்புரியும் திருக்கோயில்…

பாரதத் திருநாட்டில் வேறெங்கும் காணஅரிதான கிண்ணித்தோ்-ஒவ்வோர் ஆண்டும் தோ்த்திருவிழாவாகக் கொண்டாடப் படும் திருக்கோயில்…

நூற்றுக்கணக்கான சுமங்கலிகள்அடங்கிய ‘சுவாசினி சங்கம்’ சிறப்பாகச் செயல்பட்டுவரும் திருக்கோயில்…

தெய்வத்தின்முன்அனைவரும் சமம் என்பதை விளக்க, சிறப்புக்கட்டணத் தரிசனம் இல்லாமல், யாராக இருந்தாலும் வரிசையில் வந்துதான் தரிசிக்கவேண்டும் எனும் பெருமை வாய்ந்த திருக்கோயில்…

காளிகாம்பாளைப் பணிவோம்; அன்னை கவலைகளைத் தீர்ப்பாள்!

Leave a Reply