யாரைத்தான் நம்புவதோ? குழப்பத்தில் பொதுமக்கள்

யாரைத்தான் நம்புவதோ? குழப்பத்தில் பொதுமக்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லொ மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து அமைச்சர்களும் முதல்வரை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிடுவதாகவும், டிவி பார்ப்பதாகவும் கூறினர்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், இன்று அமைச்சர் கே.சி.வீரமணியும் அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், சசிகலாவுக்கு பயந்து மக்களிடம் பொய் சொன்னதாகவும் கூறினர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மற்றொரு அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தோம்’ என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் யார் சொல்வதை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply