யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வெடிக்கச் செய்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கும்பகோணம் அருகே யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு வெடிகுண்டுகளை இரண்டு சிறுவர்கள் செய்தனர். பின்னர் அதை வெடிக்கச் செய்து வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்
இதனை அடுத்து அந்த இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் ஏற்கனவே சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனுடன் பழகி வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது