யூடியூபின் அதிரடி களையெடுப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி
சமூக வலைத்தளங்கள், யு டியூப் ஆகியவற்றில் வெளியிடப்படும் பர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் ஆகியவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பல கோடி அளவில் இருப்பதாக சிலர் பெருமை அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது படுதோல்வி அடைவதுண்டு. இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்த நடவடிக்கையில் யூடியூப் இறங்கியுள்ளது.
ஏற்கெனவே டுவிட்டர் சமூக வலைத்தளம் போலி தொடர்பாளர்களை பிரபலங்களின் கணக்கிலிருந்து நீக்கியதை போலவே தற்போது யு டியுபும் போலி பார்வைகளை நீக்கும் நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
‘சர்ரைனோடு’ என்ற தெலுங்குப் படத்தின் ஹிந்தி டப்பிங் படம் யு டியூபில் 20 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்தது. சில நாட்களுக்கு முன்பு காப்பிரைட் விவகாரம் எனச் சொல்லி யு டியூப் அந்த வீடியோவை நீக்கி விட்டது. தற்போது அந்த வீடியோவை மீண்டும் யு டியுபில் பதிவேற்றி உள்ளார்கள்.
கடந்த சில தினங்களில் அந்த வீடியோவிற்கு 24 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. மீண்டும் அந்த வீடியோ 20 கோடி பார்வையைத் தொட வாய்ப்பில்லை. உண்மையிலேயே அந்த வீடியோவை நீக்கியதற்கு காப்பிரைட் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது சந்தேகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் அஜித், விஜய் போன்ற படங்களின் டீசர்கள், டிரைலர்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை லட்சத்தை கூட தாண்டாது என்று கூறப்படுகிறது.