யூடியூப்பில் நேரலை வசதி
யூடியூப் பிரியர்கள் இனி டெஸ்க்டாப்பிலிருந்தே எளிதாக நேரலை செய்யலாம். இதற்கான புதிய வசதி ‘யூடியூப் லைவ்’ மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் இந்த வசதி உள்ளது.
ஆனால், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து நேரலை செய்ய வேண்டும் எனில், ‘என்கோடிங்’ மென்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை எளிதாக்கும் வகையில் கம்ப்யூட்டரிலிருந்து வெப்கேம் வழியே நேரலை செய்யும் வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
தவிர, ஸ்மார்ட்போன் செயலிகளிலும் இந்த வசதியில் கூடுதல் அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. போன் கேமராவிலிருந்தும் நேரலை வசதி அறிமுகமாகிறது.
மேலும் விவரங்களுக்கு: https://youtube-creators.googleblog.com/2018/03/ making-it-easier-to-go-live.html