யூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன?

யூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன?

உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான யூடியூப் இணையதளத்தில் இல்லாத விஷயங்களே என்ற அளவில் கோடிக்கணக்கான வீடியோக்கள் அதில் கொட்டி கிடக்கின்றன. இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் யூடியூப் இணையதளம் சில நிமிடங்களுக்கு முன் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதிலும் உள்ள அதன் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வர் பிரச்சனை காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியுள்ளதாகவும், உயர்நுட்ப தொழில்நுட்ப குழுவினர் பிரச்னையை சரிசெய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் யூடியூப் இணையதளம் சற்றுமுன் அதன் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், வழக்கம்போல் தற்போது யூடியூப் இணையதளம் இயங்குவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் யூடியூப் இணையதளம் இயங்கவில்லை என்ற செய்தி வெளிவந்தவுடன் டுவிட்டரில் இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று உருவாகி ஒருசில நிமிடங்களில் உலக அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply