யூனியன் பிரதேசமாக மாற்றம்: லடாக் பகுதி மக்கள் வரவேற்பு!

யூனியன் பிரதேசமாக மாற்றம்: லடாக் பகுதி மக்கள் வரவேற்பு!

காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்த 370 என்ற சிறப்புப் பிரிவு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து கால் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் வரும் அக்டோபர் மாதம் முதல் பிரிக்கப்படஉள்ளது. இதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாறுவதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்

யூனியன் பிரதேசமாக லடாக் மாறுவதை நாங்கள் முற்றிலும் வரவேற்போம் என்றும் ஆனால் அதே நேரத்தில் லடாக் யூனியன் பிரதேசமாக மாறிய பின்னர் வேலைவாய்ப்புகளை பெருக்க தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், லடாக்கின் தனித்துவமான கலாச்சாரங்கள் அழியாமல் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்றும், அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் லடாக்கின் வளர்ச்சிக்கு பாரபட்சமின்றி சமமான நிதிகளை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்களும் இந்தியர்கள்தான். இந்தியர்களாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். பாகிஸ்தான் பக்கம் நாங்கள் செல்ல விரும்பவில்லை’ என்று லடாக் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களே மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொண்ட நிலையில் திமுக மற்றும் ஒரு சில அரசியல் கட்சிகள் மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது சரிதானா என்பதை சிந்தித்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply