ரஃபேல் ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
கடந்த சில நாட்களாக ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இன்று இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய விவரங்களை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதில்
ரஃபேல் விமான விலை, வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம் தேவை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடியாக மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
இந்த தகவல்கள் அனைத்தும் சீலிடப்பட்ட கவரில் 10 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் மத்திய அரசு அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது