ரஃபேல் ஒப்பந்த விவகாரம்: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மற்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வாசிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும், மேலும் ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்திற்கு இடமான அம்சங்கள் இல்லை எனக் கூறி ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இருந்த பிரச்சனை ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் ரபேல் விவகாரம் குறித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.