ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? ஏசி.சண்முகம் தகவல்
ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார், எப்போது அரசியலில் குதிப்பார் என கடந்த சில வாரங்களாக தமிழருவி மணியன் கூறிவந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஏ.சி சண்முகம் தெரிவித்தது என்ன? என்பதை தற்போது பார்ப்போம்
ரஜினிகாந்த் வருகிற நவம்பா் அல்லது டிசம்பா் மாதத்தில் கட்சி தொடங்குவது உறுதி. அவா் படப்பிடிப்பு பணிகளுக்காக வெளியூா் செல்லும் முன்பு நான் அவரை பார்த்தேன். ஏற்கனவே கட்சி தொடா்பான பணிகளை முடுக்கிவிட்ட பின்பு தான் வெளியூா் சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.
ஏசி சண்முகம் இவ்வாறு தெரிவித்தாலும் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் சமயத்தில்தான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.