ரஜினிகாந்த்-விஜயகாந்த் சந்திப்பு! பின்னணி என்ன?

ரஜினிகாந்த்-விஜயகாந்த் சந்திப்பு! பின்னணி என்ன?

இன்று கேப்டன் விஜயகாந்தை அவருடைய சாலிகிராமம் இல்லத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தார். தேர்தல் கூட்டணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விஜயகாந்தை ரஜினி சந்தித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல் நேற்று விஜயகாந்தை திருநாவுக்கரசர் சந்தித்த பின்னர் திமுக கூட்டணியிலும் பேசி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்றைய விஜயகாந்த்-ரஜினிகாந்த் சந்திப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியபோது, ‘இந்த சந்திப்பில் துளிகூட அரசியல் கிடையாது! சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் என்று கூறினார்.

Leave a Reply