ரஜினியின் அரசியல் கட்சியில் சேரும் அமைச்சர்கள் இவர்கள் தான்: ஈஸ்வரன் பேட்டி

ரஜினியின் அரசியல் கட்சியில் சேரும் அமைச்சர்கள் இவர்கள் தான்: ஈஸ்வரன் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சியில் சேர தற்போதைய அமைச்சர்கள் பலர் முன்வந்துள்ளதாகவும் அவரது போயஸ் கார்டன் வீட்டில் நள்ளிரவு ரகசிய சந்திப்புகள் பல நடைபெற்று வருவதாகவும் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும் தற்போது ரஜினிக்கு ஆதரவாக பேசி வருபவர்கள்தான் அவரது கட்சியில் சேர இருப்பவர்கள் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திமுக, அதிமுக மட்டுமின்ரி பல்வேறு முக்கிய கட்சிகளில் இருந்து ரஜினி கட்சியில் சேர பலர் தயாராக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈஸ்வரனின் இந்த பேட்டி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply