ரஜினியின் டுவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்

ரஜினியின் டுவிட்டுக்கு கண்டனம் தெரிவித்த பிரபலங்கள்

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டம் குறித்து கடந்த ஒரு வாரமாக எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு இதுகுறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்தார். அதில் ‘எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது என்றும் தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறியிருந்தார்

ரஜினியின் இந்த கருத்துக்கு தமிழக அரசியல் பிரபலங்கல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீமான்: ரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்! அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி: ‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகளுக்குப் பிறகு ரஜினி பேசியதன் மறுபதிப்பே இது. மக்களின் அடையாளங்கள், உரிமைகள், உணர்வுகள் அழித்தொழிக்கப்படுவதும், மாணவர்கள் மீது ஏவப்பட்ட அரச வன்முறையும் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல! அச்சு அசல் பிஜேபி கருத்து. இன்னும் எதற்கிந்த முகமூடி?

திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதி: தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்.

Leave a Reply