ரஜினியின் நட்பை விட இது முக்கியமானது: கமல்ஹாசன்
திரையுலகில் நண்பர்களாக இருந்தாலும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தற்போது அரசியலில் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக வெளிவந்து கொண்டிருந்த தகவல்களால் முதல்வர் பதவியை நோக்கி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஒருசிலருக்கு தற்போது கிலி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் கமல், ரஜினி இணைப்பு இன்னும் உறுதியாகாத நிலையில் இந்த இணைப்பு நடப்பது சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது
இதனையடுத்து இன்று பேட்டியளித்த கமல்ஹாசன்,’ ரஜினியுடன் நான் இணைவது குறித்த எங்கள் செய்தியை நீங்கள் கவனித்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் என்று தான் கூறியுள்ளோம். தமிழகத்தின் நலன் முக்கியம் என்பதால் தேவைப்பட்டால் இணைவோம். ரஜினியின் நட்பை விட தமிழகத்தின் நலன் முக்கியம் என்று கூறியுள்ளார்.
கமலின் இந்த கூற்றில் இருந்து ரஜினி, கமல் இணைப்பு என்பது நடப்பது சந்தேகமே என்று தெரிகிறது