ரஜினியும் சூர்யாவும் மக்களை குழப்புகின்றனர்: தமிழிசை
புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா கூறிய கருத்துக்கு நேற்று ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்த நிலையில் ரஜினியும் சூர்யாவும் மக்களை குழப்புகின்றனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்
ரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்றும், புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் நிச்சயமாக கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் அய்யா வைகுண்டர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கலந்து கொண்டார்