ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் தகவல்

ரஜினியை அடித்தாரா எம்ஜிஆர்? எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தவுடன் அவருக்கு எதிரான செய்திகளை பரப்புவதில் அரசியல்வாதிகள் மிக தீவிரமாக உள்ளனர். அவற்றில் ஒன்றுதான் ரஜினியை எம்ஜிஆர் அடித்தார் என்று கூறுவதூ. இந்த நிலையில் இதுகுறித்து எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி.ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது:

கடந்த 1979 ஆம் ஆண்டு ரஜினியை எம்.ஜி.ஆர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து அடித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது. ஒரு போதும் எம்.ஜி.ஆர், ரஜினியை அடிக்கவில்லை

ஆனால் அதே நேரத்தில் கோவையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நெருக்கடியைப் பயன்படுத்தி பெண் தொண்டரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை எம்.ஜி.ஆர் அடித்தார்’ என்று கூறியுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க்காப்பாளராக இருந்தவ கே.பி.ராமகிருஷ்ணன். பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு டூப் போட்டு சண்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply