ரஜினி எந்த தொகுதியில் போட்டியிடுவார்? புதிய தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஏப்ரலில் அரசியல் கட்சி தொடங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அடுத்ததாக அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
தற்போது உள்ள தகவலின் படி அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி என்ற தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தொகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஏரி தூர் வாருவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்பட பல்வேறு பணிகள் செய்து வருவதால் ரஜினிக்கு அந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும் அதனால் அவர் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
அதேபோல் சென்னையில் உள்ள ஒரு தொகுதிகளில் ரஜினி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மயிலாப்பூர் தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்க வில்லை அதற்குள் போட்டியிடும் தொகுதி இந்த தகவலா? என்றும் ஒருசிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்