ரஜினி, விஜய் கேட்காத மன்னிப்பை கேட்ட சந்தானம்

ரஜினி, விஜய் கேட்காத மன்னிப்பை கேட்ட சந்தானம்

ரஜினி, விஜய் ஆகியோர் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கும்போது பலத்த எதிர்ப்பு வந்தது. ரஜினி தனது படங்களில் புகைபிடிப்பதை நிறுத்தி கொண்டார். ஆனால் விஜய் இன்னும் அதுபோன்ற காட்சிகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சந்தானம் நடித்து வரும் ‘டகால்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அவர் புகைபிடிப்பது போல் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து அவர் வருத்தம் தெரிவித்து ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

‘டகால்டி’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கவனக்குறைவாக வெளியிடப்பட்டுவிட்டது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதை உணர்கிறேன். இனிமேல் என்னுடைய அடுத்த படங்களில் இத்தகைய காட்சிகள் இல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என உறுதி கூறுகிறேன்

Leave a Reply