ரஞ்சித் கருத்துக்கு திருமாவளவனை அடுத்து சுப.வீரபாண்டியனும் எதிர்ப்பு
பட்டியலின அமைப்புகள் மட்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றும், அவ்வாறு வெற்றி பெற்றால்தான் பட்டியலின மக்களின் வாழ்வாதாரம் மேன்படும் என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் தெரிவித்திருந்தார்
ரஞ்சித் கருத்துக்கு ஏற்கனவே விசிகவின் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்தல் அரசியலை ஜனநாயக ரீதியில் மட்டுமே அணுக வேண்டும் என்றும், ஜாதி ரீதியாக அணுகினால் ஆபத்தில் முடியும் என்றும் எச்சரிக்கை செய்தார்.
இந்த நிலையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியனும் ரஞ்சித் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பட்டியலின அமைப்புகள் மட்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.