முதல்வரிடம் குவிந்த புகார்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு வகை தேர்தல் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன
பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் தேர்வு கட்டணமாக ரூபாய் 100 கோடி வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வசூல் செய்திருப்பதாக தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு புகார் கூறியுள்ளது
இதுகுறித்து தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்த்திக் அவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் விதிமுறைகளை மீறியும் கட்டணம் வசூலித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனியார் கல்லூரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்த்திக் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது