ரன் அவுட்டில் தொடங்கி ரன் அவுட்டில் முடிவு – தோனியின் கிரிக்கெட் வாழ்கை

மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார், அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தல தோனியை அடுத்து சின்னத்தல சுரேஷ் ரெய்னாவும் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்த நிலையில் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் ரன் அவுட்டானார். அதேபோல் கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியிலும் தோனி ரன் அவுட்டானார்.

விக்கெட்டுக்கு இடையே மிக வேகமாக ஓடக்கூடியவர் என்று பெயர் பெற்றவர் தல தோனி. ஆனால் தனது முதல் போட்டியை ரன் அவுட்டில் ஆரம்பித்து கடைசி போட்டியில் ரன் அவுட்டில் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

537 போட்டிகளில் விளையாடியுள்ள தல தோனி 17,226 ரன்கள் அடித்துள்ளார். அதில் 16 சதங்களும் 108 அரை சதங்களும் உண்டு. 359 சிக்சர்கள் அடித்து உள்ளார்.

டு20 உலகக்கோப்பை , உலக கோப்பை , சாம்பியன் டிராபி என மூன்றிலும் வின்னிங் கேப்டன் என தோனியின் சாதனை வரலாற்றை தொடர்ந்து சொல்லி கொண்டே போகலாம்.

Leave a Reply