ரபேல் விவகாரம்: மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அதே விமானத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்? என ரபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்திய விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை 26 ஆக மாற்றியது ஏன்? மற்றும் அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? என்று கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி ஒட்டுமொத்த தேசமே பிரதமரின் பதிலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.