ரம்ஜானுக்காக வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம்
ரம்ஜான் நோன்பை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதை ஏற்று கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கவுள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக அதிகாலை 4 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் நிஜாமூதின் பாஷா டெல்லி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
இந்த நிலையில் இதுகுறித்து பதில் விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம் அதிகாலை 4 மணிக்கே தேர்தலை தொடங்கினால், பூத் ஏஜென்டுகளும அந்நேரத்திலேயே வரவேண்டியிருக்கும் என்றும், தற்போது 6 மணிக்கு வரவேண்டிய பூத் ஏஜென்டுகளே சரியான நேரத்தில் வருவதில்லை என்றும், எனவே அதிகாலை வாக்குப்பதிவு சாத்தியமில்லாதது என்றும் தெரிவித்துள்ளது