ரயில்வேயில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணி

ரயில்வேயில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் பணி

மத்திய ரயில்வே வாரியத்தின் கீழ் செயல்படும் ரயில்வே தகவல் அமைப்பு மையத்தில் (Centre for Railway Information Systems) ஜூனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள 54 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு நிரப்பப்படுகிறது.

பிரிவுகள் : ஜூனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியர்(Junior Software Engineers) – 40

ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் (Junior Network Engineers) – 14

வயது : விண்ணப்பதாரர் தற்போது 22 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் சாப்ட்வேர் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்ப வர்கள் பி.எஸ்சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., அல்லது சி.எஸ். பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். தொலைதூர படிப்புகளின் மூலம் மேற்கண்ட படிப்பை முடித்தவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். ஜூனியர் நெட்வொர்க் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட டிப்ளமோ படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் தொடர்புடைய பிரிவுகளில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : சென்னை உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் சி.ஆர்.ஐ.எஸ்., நிறுவனத்தின் அக்கவுண்ட் எண்ணில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 14-02-2017 மேலும் விவரங்களுக்கு:

https://cdn.digialm.com/EForms/html/form50900/Instruction.html

இ-மெயிலில் விவரங்களைக் கோர: crishelpdesk.2017@gmail.com

ஹெல்ப் லைன் எண்: 18002669063

Leave a Reply