ரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்

ரயில்வே பாதுகாப்புப் படை பணியை மொத்தமாக அள்ளி செல்லும் பெண்கள்

15,500 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படவுள்ள நிலையில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரும்பாலான இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் பெண் கான்ஸ்டபிள்கள் 2.25 சதவீதம் மட்டுமே தற்போது இருப்பதாகவும், எனவே பெண் கான்ஸ்டபிள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மொத்தமுள்ள 15,500 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பதவிக்கு 1,120 துணை ஆய்வாளர்கள், 8 ஆயிரத்து 619 போலீஸ் கான்ஸ்டபிள்கள், 798 உதவி ஊழியர்கள் தேர்வு செய்ப்படவுள்ளதாகவும், இவர்கள் அனைவருக்கும் உடல்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு முடிந்து தற்போது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply