ரயில் கட்டணம் திடீர் உயர்வு: எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா?
ரயில் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
சாதாரண வகுப்பு ரயில்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குளிர்சாதன வசதி இல்லா விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏசி வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் நகர்ப்புற மற்றும் சீசன் ரயில் கட்டணங்களில் எந்தவித மாற்றமில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது