ரயில் நிலையத்தில் மொபைல் சார்ஜ் செய்ய ஒரு டிஜிட்டல் மிஷின்: தொலைய வாய்ப்பே இல்லை
ரயில் நிலையத்திலோ அல்லது பேருந்து நிலையத்திலும் மொபைல் சார்ஜ் செய்ய வேண்டுமென்றால் பொது சர்ஜ் மையத்தில் மொபைலை சார்ஜில் போட்டுவிட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து இருக்க வேண்டும். சில சமயம் கண்ணயர்ந்து விட்டால் அவ்வளவுதான் மொபைல் காணாமல் போய்விடும்
இந்த பிரச்சனைகளை சமாளிக்க புனேவில் டிஜிட்டல் சார்ஜிங் மெஷின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த மிஷின் 24 சின்ன சின்ன அறைகள் கொண்டவையாக இருக்கும். ரூபாய் 10 ஒரு மணி நேரத்துக்கு செலுத்தி விட்டால் அந்த இருபத்தி நான்கு அறைகளில் ஒன்று திறக்கப்படும். அதன் பின்னர் அதில் மொபைலை சார்ஜ் போட்டு பூட்டி விடலாம்
இதற்காக நமக்கு ஒரு பார்கோடு உள்ள ரசீது கிடைக்கும். ஒரு மணி நேரம் நாம் எங்குவேண்டுமானாலும் சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்து அந்த பார் கோடை ஸ்கேன் செய்தால் நாம் மொபைல் வைத்திருக்கும் சின்ன அறை திறந்துவிடும். உடனே நம்முடைய மொபைலை எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம்
இந்த முறையில் திருடு போக வாய்ப்பே இல்லை இதனால் புனேயில் உள்ள ரயில்வே பயணிகள் இதனால் மிகுந்த பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற மெஷின் சென்னை உள்பட பெருநகரங்களில் விரைவில் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது