ரஷ்யாவில் தேசிய கீதத்தை அவமதித்தாரா மோடி? பெரும் பரபரப்பு

ரஷ்யாவில் தேசிய கீதத்தை அவமதித்தாரா மோடி? பெரும் பரபரப்பு
modi1
பாரத பிரதமராக கடந்த பதவியேற்ற நரேந்திரமோடி, இந்தியாவில் இருந்ததைவிட வெளிநாட்டில் இருந்த காலம்தான் அதிகம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தாலும், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து கொண்டே உள்ளார். இந்நிலையில் அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இந்திய தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ல்

பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று சென்றார்.  மாஸ்கோ விமான நிலையத்தில் அவரை ரஷ்ய நாட்டு அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பை கொடுத்தனர்.

பின்னர் அங்கு இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை கவனிக்காத பிரதமர் சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டார்.  உடனே அதனைக் கவனித்த அதிகாரிகள், அவரிடம் சென்று தேசிய கீதம் இசைக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கூறி அவரின் கையைப் பிடித்து திரும்ப அழைத்து வந்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே  சில நிகழ்வுகளில் தேசியக்கொடியை அவமதித்ததாக மோடி மீது சர்ச்சை கிளம்பிய நிலையில் தற்போதும் அதே போன்ற பிரச்சனை கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply