ரஷ்யா விதித்த ரூ.5.4 லட்சம் அபராதத்தை செலுத்திய கூகுள்
ரஷியாவில் ‘கூகுள்’ உள்பட அனைத்து சியர்ச் இஞ்சின் தேடுதளங்களில் சட்டவிரோத தகவல்களை கொண்ட இணையதளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அந்நாட்டுஅரசு புதிய சட்டம் இயற்றிய நிலையில் இந்த சட்டத்தை கூகுள் சரியாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது
இதுகுறித்து ரஷ்ய சைபர் க்ரைம் வல்லுனர்கள் ஆய்வு செய்ததில் ‘கூகுள்’ தேடுபொறி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. ரஷ்ய அரசால் தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று வந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5.4 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராத தொகையை ‘கூகுள்’ நிறுவனம் செலுத்தி விட்டதாகவும் ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.