ரஷ்ய அதிகாரிகள் கொடுத்த நாற்காலியில் உட்கார மறுத்த பிரதமர் மோடி!
ரஷ்யாவின் விளாடிஸ்வோஸ்டாக் சென்றுள்ள பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வின் போது, ரஷ்ய அதிகாரிகள் அனைவருக்கும் சாதாரண நாற்காலியை ஏற்பாடு செய்து பிரதமர் மோடிக்கு மட்டும் சொகுசு நாற்காலியை போட்டிருந்தனர்.
இதனை பார்த்த பிரதமர் மோடி, சொகுசு நாற்காலியை அகற்றிவிட்டு சாதாரண நாற்காலியை போடுமாறு கூறினார். உடனே அதிகாரிகள் நாற்காலியை மாற்றினர்.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமரின் எளிமையை ரஷ்யர்கள் பாராட்டி வருகின்றனர்
PM @NarendraModi जी की सरलता का उदाहरण आज पुनः देखने को मिला, उन्होंने रूस में अपने लिए की गई विशेष व्यवस्था को हटवा कर अन्य लोगों के साथ सामान्य कुर्सी पर बैठने की इच्छा जाहिर की। pic.twitter.com/6Rn7eHid6N
— Piyush Goyal (@PiyushGoyal) September 5, 2019