ரஷ்ய அதிபர் ஜல்லிக்கட்டை பார்க்க வருவது உண்மையா?
சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்ததை அடுத்து மாமல்லபுரத்திற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்
இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை பார்வையிட ரஷ்ய அதிபர் புதின் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு ஜல்லிக்கட்டை பார்வையிட புதின் வந்தால், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெறும் என்று கூறப்பட்டது
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஜல்லிக்கட்டைப் பார்க்க அலங்காநல்லூர் வரவேற்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது