ராகுல்காந்திக்கு தகுந்த தலித் மணப்பெண்ணை பார்க்க தயார்: அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு 47 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்ற கேள்வி அவரிடம் தொடரந்து கேட்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘னக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. திருமணம் நடக்கும்போது நடக்கட்டும்’’ என்று கூறினார்
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இதுகுறித்து கூறியபோது, ‘ராகுல்காந்தி ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். அவர் விரும்பினால் அவருக்காக ஒரு தலித் பெண்ணை பார்க்க தயார் என்று அவர் கூறினார். மேலும் ராகுல்காந்தி அவ்வப்போது தலித் வீடுகளுக்கு சென்று உணவு சாப்பிடுகிறார். ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் மட்டும் சாதி வேற்றுமையை வேரறுத்து விட முடியாது. திருமணமும் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்