ராகுல்காந்தி திட்டத்தை செயல்படுத்துவது எப்படி? ப.சிதம்பரம்
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ”காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் ஏழ்மை மீது துல்லியத் தாக்குதல் நடத்தப் போகிறது. தேசத்தில் இருந்து ஏழைகளை விரட்ட பாஜக முயற்சித்தது. நாங்கள் ஏழ்மையை விரட்ட முயற்சிக்கிறோம்.
ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானம் தான் எங்களின் மிகப்பெரிய திட்டம். இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்தோம். இதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 20 சதவீத ஏழை மக்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வருமானம் கிடைக்க உறுதி செய்யப்படும் என்று கூறினார்.
இந்த திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியபோது, ‘ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டத்தால் சுமார் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயனடையும் என்றும், ரூ.72,000 திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.