ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை பறிக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி
swamy
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி ஒரு இந்திய பிரஜை இல்லை என்றும் அவர் பிரிட்டன் நாட்டின் அதிகாரபூர்வமான பிரஜை என்றும், அதனால் அவரது இந்திய குடியுரிமையையும், எம்.பிபதவியையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு ஒரு விரிவான கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்த பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது, “பிரிட்டனை சேர்ந்த Backops Limited  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்பிட்டு, பிரிட்டன் பகுதியில் உள்ள ஒரு முகவரியை தெரிவித்துள்ளார். அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆவண ஆதாரங்களுடன் கடிதம் எழுதி உள்ளேன். இந்திய அரசியல் சாசனம், பிரிவு 9 ன் படி, ராகுல் சட்டவிரோதமாக பிரிட்டிஷ்  குடியுரிமை கொண்டிருப்பதால் அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும்

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். ராகுல்காந்தி குறித்து திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை சுப்பிரமணியன் சுவாமி ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply