ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் – மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம்

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில நாட்களாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ரபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்வதாகவும், அவர் ஒரு கோமாளி இளவரசர் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அருண்ஜெட்லி தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளதாவது :-

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் முதல் பொய்யாகும். 15 தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததாக கூறுவது 2 வது பொய்யாகும். முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட பொய்களை கூறிவரும் ஒருவர் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவர் என கருதப்படுவார்.

பொய்களை கூறி சூழலை மாசுபடுத்தும் ஒரு கோமாளி இளவரசரை பொது சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதிக்கலாமா? என்பது குறித்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

Leave a Reply