முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற பகுதியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மரணம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர்களை சந்திக்க சென்றனர்
ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட பரபரப்பில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவர் மீதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது