ராகுல் வயநாட்டில் போட்டியிட போவதால் என்ன ஆகப் போகிறது: முன்னாள் முதல்வர்

ராகுல் வயநாட்டில் போட்டியிட போவதால் என்ன ஆகப் போகிறது: முன்னாள் முதல்வர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் போட்டியிட்டு என்ன ஆகப் போகிறது என்றும், , எந்த விஷயத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத, குழந்தையாகவே அவர் இருந்து வருகிறார் என்றும் அதனால் அவரை பப்பு என்று அழைப்பதைவிட அமுல் பேபி என்று அழைப்பதே பொருத்தம் என்றும் கேரள மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, அவரை இடதுசாரிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் ராகுல் காந்தியை வயநாடு தொகுதியில் தோற்கடிப்போம் என கேரள கம்யூனிஸ்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுலுக்கு எதிரான வாக்குகள் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவுக்கு பிரிந்துவிடுவதால் அங்கு ராகுல்காந்தி எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே கணிக்கப்படுகிறது

Leave a Reply