ராகு கால பூஜையின் கதை தெரியுமா

ராகு கால பூஜையின் கதை தெரியுமா

ராகுகால வழிபாட்டு முறை அண்மைக் காலத்தில் தோன்றியது. எனவே இதற்கு இலக்கியச் சான்றுகள் இல்லை. ஆனால் இந்துப் பண்டிகையில் எந்தவொரு வழிபாட்டிற்கும் ஒரு கதை இருத்தல் மரபு. ஆனால் ராகு கால பூஜைக்கு கதை இருப்பதாக தெரியவில்லை.

ராகுவிற்கும் ராகு காலத்திற்கும் தொடர்பில்லை. ஆனால், ராகுவிற்கும் ராகு காலத்திற்கும் தொடர்புள்ளது என்பதனைப் பின்வரும் கதை வெளிப்படுத்துகின்றது. “ஒருசமயம் மகிசாசூரன் உள்ளிட்ட பல அரக்கர்கள் மும்மூர்த்திகளிடம் பெருந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று, பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களை எல்லாம் துன்புறுத்தி அழிக்கவும் தலைப்பட்டனர். அதனால் தேவர்கள் அனைவரும் மும்மூர்த்திகளிடம் ஓடி வந்து முறையிட்டனர்.

பெற்ற வரங்களை வைத்துக் கொண்டு அசுரர்கள் ஆட்டம் போடுவதால் அவர்களை அழிப்பது எப்படி என்பதை முடிவெடுத்தனர். அதன்படி அவர்கள் இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி ஆகிய முச்சக்திகளையும் ஒன்றாக்கினர். அந்த மூன்று சக்திகளும் சேர்ந்து மகா துர்க்கையானாள்.

துர்க்கையாக மாறிய சக்தி அசுரர்களையெல்லாம் அழித்தாள். மகிசா சூரன் உள்ளிட்ட அசுரர் களையெல்லாம் அழித்தது கண்டு தேவர்கள் துர்க்கையைத் துதித்து மகிசா சூர மர்த்தினிப் பாடல்களைப் பாடினார்கள்.

இதனால் துர்க்கை என்றாலே துன்பங்களை அழிப்பவள் என்ற பெயரும் ஏற்ட்டது. அசுரர் களை வதைத்துத் தேவர்களின் துன்பத்தைப் போக்கிய காலம் ராகு காலம். அதனால்தான் துர்க்கையை வழிபடும் சிறந்த நேரமாக ராகு காலத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

ராகு கால பூஜை தோன்றிய காலத்தைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகிறது. ராகு கால பூஜை இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியது என்றும், பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு தோன்றியது இந்த வழிபாடு, இதனைத் தொடங்கி வைத்தவர் காஞ்சி சகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகள் என்றும், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அஷ்ட கிரகங்கள் ஒன்று சேர்ந்தபோது மக்களுக்கு இக்கிரகங்களினால் வரும் துன்பம் விலக வேண்டுமெனில் ராகு கால பூஜையைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளினை விடுத்தார் சகத்குரு ஜெயந்திர சரசுவதி சுவாமிகள் என்றும், கோளாறு பதிகத்திலேயே பாம்பு தீமையை விளைவிக்கும் என்ற குறிப்பின் மூலம் ராகு கால வழிபாடு வந்திருக்கின்றது. ஆனால் இடைக் காலத்தில் சிறிய நாட்கள் மறைந்திருந்து இப்போது கடந்த சில ஆண்டுகளாக புகழ் பெற்றி ருக்கிறது என்றும் பலவிதமாகக் கூறப்படுகின்றது.

1980-ம் ஆண்டு கிரகணம் ஏற்பட்டபோது சகத் குரு சங்கராச்சாரிய சுவாமிகள் எல்லா இந்து மக்களையும் கிரகணத்தின்போது தானம் செய்யும் பொருட்களுடன் வரும் படிக் கூறினார். சில பகுதிகளில் மக்கள் பூசாரிகளுக்கும், பிரா மணர்களுக்கும், பாம்புகளுக்கும் பரிசு வழங்கினர்.

ஒரு சமயம் கிரகணத்தின்போது ராகுவுக்கு தியாகம் செய்வதற்காக இந்திரன் இரண்டு பாம்புகளைக் கொண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது. தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்த பாம்புகளைப் பரிசளிப்பதும் உண்டு. கிரகணத்தின்போது தோன்றிய வழிபாடே பிறகு ராகு கால பூஜையாக தோன்றுவதற்கும் வாய்ப்பாக இருந்திருக்கலாம்.

Leave a Reply