ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததால் 3வது நபராக ராஜபக்சே பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிரதமர் பதவியேற்ற ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளார். அதே நேரத்தில் மீண்டும் ரனிலை பிரதமராக்க அதிபர் சிறிசேனா மறுத்துள்ளார். இந்த நிலையில் சிறிசேனா இதுகுறித்து கூறியபோது, ‘ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்றார்.

இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தி உள்ளதால் இலங்கையில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply